வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதைத்தொடர்ந்து ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 11 தேதியன்று வெளியாவதாக இருந்த ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Our #DriverJamuna is postponed from its said release on November 11 to a later date
The new release date will be announced soon
We thank you for your love and patience
Team#DriverJamuna @aishu_dil @kinslin @SPChowdhary3 @GhibranOfficial @gokulbenoy #AnlArasu pic.twitter.com/Mp40A6E9FJ
— 18 Reels (@18Reels_) November 10, 2022

