Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

Aishwarya Lekshmi Opens Up on Her Social Media Break

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென சமூக வலைதளங்களில் இருந்து விலகினார்.

அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தனது முடிவுக்கான காரணம் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில், “பொதுவாக என் வாழ்க்கை இப்போது இப்படியே இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சமூக வலைதளங்களில் இருந்த காலத்தைவிட, அதிலிருந்து விலகிய பிறகு மனதளவில் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். தற்போது என் வாழ்க்கையில் நான் ஒரு சிறந்த நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.

சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டும் என்று நான் முடிவு செய்ய காரணமாக இருந்த சில விஷயங்கள், ஓரளவுக்கு இப்போதும் என் வாழ்க்கையில் இருக்கின்றன. அதனால், அந்த முடிவு எனக்கு சரியானதாகவே தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.