பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி கவனம் ஈர்த்துள்ளது.
அவர் பகிர்ந்துள்ள பதிவில், “உங்கள் சாதி, மதம், பிறந்த இடம் மற்றும் பாலினம் ஆகியவை அனைத்தும் பிறப்பால் வந்தவை. அவற்றைப் பெறுவதற்கு நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. எனவே, அவற்றைப் பற்றி பெருமைப்படுவதை நிறுத்துங்கள். உங்கள் குணம், செயல்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மனிதநேயத்தைப் பற்றிப் பெருமைப்படுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதநேயம், நல்ல குணம் மற்றும் செயல்களே ஒருவரின் உண்மையான அடையாளம் என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த பதிவு, பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகை மீனாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் தங்களது ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


