தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நடிகர் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, வெறும் 4 நிமிட பாடலுக்காக இரண்டு நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ள கீர்த்தி சுரேஷுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து படக்குழுவினர், கீர்த்தி சுரேஷ் சிறப்புப் பாடலில் நடனமாடுவது உண்மைதான். அந்த பாடல் கதையில் முக்கியமான இடம் பெறும். ஆனால், அவரது சம்பளம் தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட முடியாது என தெரிவித்துள்ளனர்.
குடும்பப் பாங்கான மற்றும் வலுவான கதாபாத்திரங்களில் அதிகம் தோன்றும் கீர்த்தி சுரேஷ், முதல் முறையாக இப்படியொரு சிறப்பு குத்துப்பாடலுக்கு நடனமாடவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

