Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா.வைரலாகும் போட்டோ

actress ileana-baby-bump-photos update

தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை இலியானா. தமிழில் கேடி என்ற படத்தில் மூலம் அறிமுகமான இவர் இறுதியாக தளபதி விஜய் உடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வரும் இலியானா தெலுகு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இதுவரை தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற தகவலை வெளியிடாமல் இருக்கும் இலியானா முதல் முறையாக அவர் கர்ப்பமாக இருக்கும் பேபிபம்ப் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.