actor vishal-case-details
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டு 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதையடுத்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இந்தி வெர்ஷனை பார்க்க மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மும்பை சென்சார் போர்டுக்கு ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இந்தி வெர்ஷனுக்காக ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக வழங்கியுள்ளதாகவும் இந்த பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்தோம் என்றும் படத்தை திரையிடுவதற்கு ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இனிவரும் காலங்களில் எந்த தயாரிப்பாளருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை மகராஷ்டிரா முதல் மந்திரி மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு, இது போன்று ஊழல் நடைபெற்றுள்ளதாக விஷால் தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஊழல்களில் மத்திய அரசு சகிப்பு தன்மையற்ற நிலையை கடைப்பிடித்து வருகிறது (ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்). யாரேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மேலும், இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இன்று மும்பை அனுப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று மத்திய தணிக்கைத்துறையால் அச்சுறுத்தல் அல்லது மிரட்டலுக்கு யாராவது ஆளாக்கப்பட்டால் அது தொடர்பான தகவல்களை வழங்கி மத்திய அரசுக்கு உதவுமாறும் கேட்டுள்ளது.
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…