தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தீப் கிஷன். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவரது நடிப்பில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதியான நாளை மைக்கேல் திரைப்படம் வெளியாக உள்ளது.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தில் சந்திப் கிஷனுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் இப்படம் வெற்றி பெற சந்திப் கிஷன், தளபதி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#ThalapathyVijay | #SundeepKishan ????
Sundeep Kishan Met Thalapathy Vijay & Get Wishes For #Michael Film????????#Michael From TOMORROW ???? pic.twitter.com/B1EIxEPqHU
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 2, 2023

