Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தெலுங்கு பட இயக்குனருடன் மீண்டும் இணையும் நடிகர் தனுஷ்.!

Actor Dhanush in Upcoming Telugu Movie

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த படங்கள் மட்டுமல்லாமல் தன் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் இவர் மீண்டும் தெலுங்கு இயக்குனர் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகி வரும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் ஒருவர் தான் இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம் வரும் போயடி ஸ்ரீனு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போயடி ஸ்ரீனு இயக்கத்தில் வெளியான அகண்டா என்ற திரைப்படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush in Upcoming Telugu Movie
Actor Dhanush in Upcoming Telugu Movie