Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்!

A.R. Rahman’s Son Ameen Involved in Car Accident in Chennai

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து தனது நண்பர் பார்கவுடன் சொகுசு காரில் அமீன் சென்று கொண்டிருந்துள்ளார். கார் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த கால் டாக்ஸி மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஏ.ஆர். அமீன், அவரது நண்பர் பார்கவ் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர் ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

23 வயதான ஏ.ஆர். அமீன், சிறு வயதிலேயே தனது தந்தை ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடகராக அறிமுகமானார். ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.