Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்யாவுக்கு புது பெயர் வைத்து கலாய்த்த ரசிகர்கள்.. பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்

Baakiyalakshmi Serial Trolls About Court Episode

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இத சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஆகியவை விவாகரத்து செய்ய முடிவு செய்து அவருக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து வாங்கி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கோர்ட்டில் எல்லோரும் விவாகரத்து கேட்டு வந்து நிற்கும் நிலையில் அதை எல்லாம் பார்த்த பாக்கியா அப்பவும் கோபி செய்யும் தவறை புரிந்து கொள்ளாமல் அவரை மலைபோல் நம்புகிறார். ‌ இதெல்லாம் கூட ஓகே ஆனால் நீதிபதி கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு இப்போ எதுக்கு இந்த முடிவை எடுத்தீர்கள் என கேட்க பாக்கியா அப்போதும் ஒன்றும் தெரியாமல் நிற்பதெல்லாம் ஓவர்.

இதெல்லாம் எங்கேயும் எப்பவும் சாத்தியமே கிடையாது. அந்த அளவிற்கு ஒன்றும் புரியாமல் யாரும் இருக்க வாய்ப்பில்லை என ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர். இயக்குனருக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா என கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர்.

மேலும் பாக்கியா இனி பேக்குயா என அழைக்கப்படுவார் என மீம்ஸ்களை வெளியிட்டு பங்கம் செய்து வருகின்றனர். ‌‌

Baakiyalakshmi Serial Trolls About Court Episode
Baakiyalakshmi Serial Trolls About Court Episode