தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் RRR. இந்த வருட பொங்கலுக்கு வெளியாக இருந்த இந்தத் திரைப்படம் லாக் டவுன் காரணமாக தள்ளிப் போனது.இதனையடுத்து இந்த படத்தை மார்ச் 25ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில் இந்த படத்தை லைக்கா நிறுவனம்தான் வெளியிடுகிறது. இதே நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள தான் திரைப்படமும் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஒரே நிறுவனத்தில் உருவாகும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இல்லாத காரணத்தினால் டான் திரைப்படம் தள்ளிப்போகும் என சொல்லப்பட்டு வந்தது. அதற்கேற்றார்போல தற்போது இந்த படத்தை மே 12ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் மார்ச் மாதத்தில் டான் படத்தை எதிர் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


