கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல உதவிகளை செய்தவர் சோனு சூட். கடந்த சில நாட்களுக்கு முன் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
கொரோனாவால் சிகிச்சையில் இருந்து வரும் நிலையிலும் சமூக சேவையை தொடர்ந்து வந்தார் சோனு சூட். இந்த நிலையில் தற்போது கொரோனா பரிசோதனை செய்து இருக்கிறார்.
அதில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோனு சூட் பதிவு செய்திருக்கிறார்.
Tested: COVID-19 Negative. pic.twitter.com/wF61zXVJ6m
— sonu sood (@SonuSood) April 23, 2021

