சுஷாந்த் நம் தமிழக மக்களுக்கு தோனியாக மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு தோனி கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.
இந்நிலையில் சுஷாந்த் நேற்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது.
இதை அறிந்த ஒட்டு மொத்த திரையுலகமும் கடும் அதிர்ச்சி தான், இந்த சிறிய வயதில் ஏன் இப்படி ஒரு முடிவை சுஷாந்த் எடுத்தார் என்று எல்லோருமே அதிர்ச்சியாகினார்கள்.
தற்போது சுஷாந்த் அவர்களின் இறப்பு குறித்து நடிகை கங்கனா கடுமையாக சாடியுள்ளார்.
இதில் குறிப்பாக பாலிவுட்டில் அவரை தொடர்ந்து ஓரங்கட்டி ஸ்டார் கிட்ஸுகளை மட்டும் கொண்டாடி வந்ததை சொல்லி கடுமையாக திட்டியுள்ளார்.
அதோடு கங்கனா இது ஒரு மர்டர், தற்கொலை என்று சொல்லாதீர்கள், பாலிவுட் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது என கூறியுள்ளார்.
#KanganaRanaut exposes the propaganda by industry arnd #SushantSinghRajput‘s tragic death &how the narrative is spun to hide how their actions pushed #Sushant to the edge.Why it’s imp to give talent their due &when celebs struggle with personal issues media to practice restraint pic.twitter.com/PI70xJgUVL
— Team Kangana Ranaut (@KanganaTeam) June 15, 2020

