Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

I Came Close to Marriage But It Didn’t Scare Me - Shruti Haasan Opens Up

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஒருமுறை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக சென்றதாகவும், ஆனால் அந்த அனுபவம் தனக்கு எந்தவித பயத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் தனக்கு நல்லதொரு துணை வேண்டும் என்று கூறியுள்ள சுருதி ஹாசன், அதேநேரத்தில் சமூகத்தின் வழக்கமான கட்டுப்பாடுகளுக்குள் தன்னை ஒருபோதும் அடைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். துணையுடன் இணைந்து வாழ்வதும், ஒருவரையொருவர் அன்புடன் புரிந்துகொள்வதும்தான் முக்கியம் என்றும், திருமணத்திற்கான சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமே ஒரு உறவை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், திருமண விழாக்களுக்காக செய்யப்படும் அதிகப்படியான செலவுகள் குறித்தும் சுருதி ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆடம்பர திருமணங்களுக்காக செலவிடப்படும் பெரும் தொகையை ஆதரவற்றவர்களுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் குறித்து பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும், தாய்மையை விரும்புவதாக சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதற்கோ அல்லது உயிரியல் ரீதியாக தாயாவதற்கோ தான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடனான நான்கு ஆண்டுகால உறவு 2024-ல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது தனிமையில் இருப்பதாகவும், தனது கலைப் பயணம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார். தற்போது ‘கூலி’ திரைப்படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மானுடன் இணைந்து ‘ஆகாசம்கோ ஒரு தாரா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.