நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், அதனைப் பதிவிட்ட மாளவிகா ரகுநாத்துக்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
பிரபலங்கள் தங்களது நண்பர்களுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடும்போது, அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது தனியுரிமையில் தலையிடும் செயலாகும் என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரபலங்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது என்றும், அவர்களின் தனிப்பட்ட நேரத்தை மதிக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, விமர்சனங்களுக்கு பதிலளித்த மாளவிகா ரகுநாத், “பொதுவான இடத்தில் திரிஷா உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது தனியுரிமையில் தலையிடாமல், தூரத்திலிருந்தே புகைப்படம் எடுத்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

