Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சென்னை ஆடம்பர வீட்டைவிட மும்பையின் 1,700 சதுர அடி வீடுதான் மகிழ்ச்சி – சூர்யா

Mumbai Home Makes Us Happier Than Our Luxurious Chennai House – Suriya

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற சூர்யா, மும்பையில் தனது குடும்பத்துடன் வாழும் எளிமையான வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மும்பையில் தாங்கள் சுமார் 1,700 சதுர அடி கொண்ட சிறிய வீட்டில் வசித்து வருவதாகக் கூறிய அவர், அந்த வீடு தங்களுக்குப் பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “சென்னையில் அதிகம் பணிபுரிகிறேன். படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் மும்பைக்கு செல்வேன். எங்களது மும்பை வீடு மிகவும் எளிமையானது. படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை என அனைத்தும் அருகருகே இருப்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடிகிறது.

எங்கிருந்தாலும் என் குழந்தைகள் தியா, தேவ் இருவரையும் உடனடியாக அழைக்க முடியும். எங்களது வாழ்க்கை குறித்து அங்கு பலருக்கும் தெரியாது என்பதால் கிடைக்கும் அமைதியும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வீடு எங்களுக்கு அளிக்கும் அன்பும் மகிழ்ச்சியும் அளவிட முடியாதது” என சூர்யா தெரிவித்துள்ளார்.