Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்குமாரின் “கிளாடியேட்டர்ஸ்” ஆவணப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

GLADIATORS first look launched

நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘Gladiators – In Pursuit of Challenges’ ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

90 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம், நடிகர் அஜித் குமார் கார் பந்தய உலகில் மேற்கொண்ட சர்வதேச பயணத்தையும், அவர் சந்தித்த சவால்கள், பின்னடைவுகள் மற்றும் வெற்றிகளை விரிவாக பதிவு செய்கிறது.

பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். Ajith Kumar Sports Services LLC நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற Asian Le Mans Series மற்றும் 24H Series உள்ளிட்ட சர்வதேச கார் பந்தயங்களில் அஜித் குமார் மற்றும் அவரது அணி பங்கேற்ற உண்மை தருணங்களை நேரடியாக பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, ரேசிங் களத்தில் அஜித் எதிர்கொண்ட பல்வேறு சவால்கள், விபத்துகள், கடுமையான போட்டிகள் மற்றும் 2025 துபாய் 24H பந்தயத்தில் போடியம் வென்ற வரலாற்றுச் சாதனை வரை அவரது முழு ரேசிங் பயணமும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவின் முன்னணி ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயன், பிரபல பந்தய வீரர் ஆதித்யா படேல், சர்வதேச கமெண்டேட்டர் ஜூலியன் கெர்பி உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகளும் இதில் தோன்றுகின்றனர்.

90 நிமிட ஆவணப்படமாக உருவாகியிருந்தாலும், உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.