பாப் இசை உலகின் மறக்க முடியாத நட்சத்திரமான மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இன்றளவும் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், அவரது புகழ்பெற்ற ‘Bad’ பாடலுக்கு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்த ஷ்ரத்தா கபூர், “உங்களை இப்படி ஆட வைக்கும் ஒருவரை கண்டுபிடியுங்கள்” என்ற நகைச்சுவையான குறிப்பையும் இணைத்திருந்தார். அவரது உற்சாகமான மற்றும் குறும்புத்தனமான நடன அசைவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், சிலர் வழக்கம்போல் வேடிக்கையான கருத்துகளையும் பதிவிட்டனர். அதில் ஒருவர், “வீடு மிகவும் அலங்கோலமாக இருக்கிறது. குறைந்தபட்சம் இந்த வீடியோவை கிரீன் ஸ்கிரீனிலாவது எடுத்திருக்கலாம்” என்று கிண்டலாக கருத்து தெரிவித்தார்.
அந்த கருத்துக்கு உடனடியாக பதிலளித்த ஷ்ரத்தா, “அன்புள்ள அம்மா, உங்கள் உண்மையான ஐடி-யிலிருந்து வாருங்கள்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த பதிலும் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் தொடர்ந்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், ஷ்ரத்தா கபூரின் இந்த வீடியோவும் இணையத்தில் புதிய கவனத்தை பெற்றுள்ளது.
View this post on Instagram

