தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான அவரது 45வது படமான “கருப்பு” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் வெற்றி கண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 46வது திரைப்படத்திற்கு “விஸ்வநாத் & சன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. குடும்ப உணர்வுகளும் உறவுகளும் மையமாக உருவாகும் இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
From my favourites #VenkyAtluri and @gvprakash… see u all soon!
Eid Mubarak! #VishwanathAndSons from 14th August@NimishRavi @_mamithabaiju @realradikaa akka @TandonRaveena @SitharaEnts @vamsi84 pic.twitter.com/xtUfvIxQup— Suriya Sivakumar (@Suriya_offl) May 28, 2026

