Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராம் சரண் பாதுகாவலரின் ஒரு நாள் சம்பளம் ரூ.2 லட்சமா?

Ram Charan’s bodyguard earns Rs.2 lakh per day

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராம் சரண், தனது ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும், தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற விழாவில் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் ராம் சரணின் கையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் ராம் சரணின் பாதுகாவலராக செயல்பட்ட சர்வதேச தற்காப்புக் கலை வீரர் கெவின் குண்டா பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். ‘பெத்தி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் கூட்டத்தை கட்டுப்படுத்திய விதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், பாதுகாப்பு பணிக்காக கெவின் குண்டாவுக்கு ராம் சரண் ஒரு நாள் சம்பளமாக ரூ.2 லட்சம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் பாதுகாவலர்களில் ஒருவராக கெவின் குண்டா பேசப்பட்டு வருகிறார்.