Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“அந்த காலத்திலேயே விஜய் மிகப்பெரிய ஸ்டார்” – பிரியங்கா சோப்ரா

“Vijay Was a Huge Star Even Back Then” – Priyanka Chopra

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது:

“நான் முதன்முதலாக தமிழில் நடித்த திரைப்படம் ‘தமிழன்’. அந்த படத்தில் நடிக்கும்போது தமிழ் உச்சரிப்புகளை புரிந்துகொள்வதிலும், சரியாக பேசுவதிலும் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டேன்.

தமிழில் என்னுடன் நடித்த முதல் ஹீரோ விஜய் தான். அப்போது அவர் மிகப்பெரிய பிரபலமாக இருந்தார். படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை பார்க்க வந்து கொண்டிருப்பார்கள்.

அவர் பேசினாலும், சிரித்தாலும், நடனம் ஆடினாலும் அதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த சூழ்நிலையை பார்த்தபோது, நான் உண்மையிலேயே படப்பிடிப்பு தளத்தில்தானா இருக்கிறேன் என்றே ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது.

அவருக்கான ரசிகர்களின் அன்பை பார்த்தபோது, ஒரு கடவுளை தரிசிப்பது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என் அம்மாவும் விஜயை ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்று கூறியுள்ளார்” என்றும் பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.