தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய X பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான முழு பெரும்பான்மை இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை நாடி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால், விஜய் தலைமையிலான அரசு அமையுமா? அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பாரா? என்ற கேள்விகள் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது X தளத்தில்,
“நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்… கைவிட மாட்டான்! நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய்க்கு ஆதரவாகவே வெங்கட் பிரபு இந்த பதிவை பகிர்ந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்
— venkat prabhu (@vp_offl) May 6, 2026

