Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என் மகள் உங்களுடைய தீவிர ரசிகை அவளுக்கு பாட வாய்ப்பு கொடுங்கள்.. பிரபல இசையமைப்பாளரிடம் தேவயானி வைத்த கோரிக்கை..!

actress Devayani asked Sai Abhayankar for a chance for her daughter..!

80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 BHK என்ற படத்தில் நடித்திருந்தார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது பாடல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் அவரது குரலை பாராட்டி பேசி இருந்தனர் இந்த நிலையில் தன் மகள் இனியாவுக்காக தேவயானி சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதாவது முன்பு சாய் அபயங்கரின் அப்பா அம்மாவுக்கு ரசிகர்களாக இருந்தோம் இப்போது அவருக்கு ரசிகர்களாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று தெரிவித்த தேவயானி எனது மகளும் நன்றாக பாடுவார் அவர் உங்களுடைய தீவிர ரசிகை அவளுக்கு உங்கள் இசையில் ஒரு பாடல் பாட வேண்டும் என்பது ஆசை என்று கூறி வாய்ப்பிருந்தால் அழைத்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress Devayani asked Sai Abhayankar for a chance for her daughter..!