Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அற்புதமான ரொமான்டிக் காமெடி: வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

Bhagwant Kesari director Anil Ravipudi praises 'With Love' as a wonderful romantic comedy

அற்புதமான ரொமான்டிக் காமெடி: வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

புதுமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ படம் பிப்ரவரி 6-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

அபிஷன் ஜீவிந்தை இயக்குநராக அனைவருக்கும் தெரியும் என்றாலும் ஹீரோவாக இது அவருக்கு முதல் படமாகும். வித் லவ் படம் பார்ப்பவர்கள், பாசிட்டிவாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பகவந்த் கேசரி படம் புகழ் இயக்குநர் அனில் ரவிபுடி. வித் லவ்வை தெலுங்கில் பார்த்துவிட்டு, எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

‘வித் லவ் படத்தை என்ஜாய் செய்து பார்த்தேன். அண்மையில் வந்த ரொமான்டிக் காமெடி படங்களில் சிறப்பானதாக இருக்கிறது. தெலுங்கு வசனங்கள் அருமை. அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பு அருமை. ஷான் ரோல்டனின் இசை அழகாக உள்ளது. புதுமுகம் மதனுக்கு வாழ்த்துக்கள். இந்த க்யூட் படத்தை தயாரித்த சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ்ராஜுக்கு வாழ்த்துக்கள். படத்தை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த ராணாவுக்குவும் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அனில் ரவிபுடியின் ட்வீட்டை பார்த்த அபிஷன் ஜீவிந்த், ‘நன்றி அண்ணா. மன சங்கர வரபிரசாத் காரு படம் பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது’ என கூறியுள்ளார்.

Bhagwant Kesari director Anil Ravipudi praises 'With Love' as a wonderful romantic comedy
Bhagwant Kesari director Anil Ravipudi praises ‘With Love’ as a wonderful romantic comedy