பிரியா அட்லி தம்பதி குட் நியூஸ் சொல்லி உள்ளனர்.
பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி படத்தை இயக்கத்தின் முதல் மூலம் அறிமுகமானவர் அட்லி அதனைத் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
பிறகு ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் நடத்தியிருந்தது அடுத்தடுத்து படங்களை பிசியாக இருக்கும் இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே இவருக்கு ஒரு மகன் பிறந்திருக்கும் நிலையில் தற்போது பிரியா இரண்டாவதாக கர்ப்பமாகியுள்ளார் இந்த ஜோடி அவர்களது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகியுள்ளனர். இதனை புகைப்படத்துடன் அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


