Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷின் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

The audio launch of 'Parasakthi' will be held on January 3rd!

தனுஷின் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

பன்முகத்திறமையாளர் தனுஷ், போர்த்தொழில் பட இயக்குநரின் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் D54. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மிக குறுகிய காலகட்டத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. இந்நிலையில் D54 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் ‘அறுவடை’ என வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் புத்தாண்டு அல்லது பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ஆக்சன் திரில்லர் மற்றும் பீரியட் படமாக தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. பீரியட் படம் என்றால் 80 மற்றும் 90 ஆண்டுகளில் நடப்பதைப் போல கதையம்சம் கொண்ட படமாகவே இருக்கும் எனவும், அதில் அரசியலும் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தனுஷ் அரசியல் கதைக்களம் கொண்ட படங்களில் நடித்ததில்லை என்பதால் D54 படத்தில் அரசியல் இருக்கும் என வெளியான தகவல் அவரது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை விக்னேஷ் ராஜா மேற்கொண்டு வருகின்றார். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிடும். ஏப்ரல் அல்லது மே மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு D54 படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

The audio launch of 'Parasakthi' will be held on January 3rd!
The audio launch of ‘Parasakthi’ will be held on January 3rd!