‘ஜனநாயகன்’ ரீமேக் படமா? – இசை வெளியீட்டு விழாவில் ஹெச்.வினோத் விளக்கம்
விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படக்கதையை அடிப்படையாக வைத்து தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான். ரெண்டே விஷயம் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
‘ஜனநாயகன்’ படம் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது. ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐயா இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம்.
ஆடிப் பாடி கொண்டாடவும் விஷயம் இருக்கு, அமைதியாக உட்கார்ந்து யோசிக்கவும் விஷயம் இருக்கும்’ என கூறியுள்ளார். இதனால் இப்படம் வெளியாகும் ஜனவரி 9-ந்தேதியே பொங்கல் பண்டிகை தொடங்குகிறது என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு உற்சாகமாகி உள்ளனர்.


