Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடந்து வந்த பாதை குறித்து கண்கலங்கி எமோஷனலாக பேசிய நடிகர் சூரி.!!

actor soori emotional speech update

கடந்து வந்த பாதை குறித்து எமோஷனலாக பேசியுள்ளார் சூரி.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரி அவர் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை எமோஷனலாக கூறியுள்ளார்.

ஒரு வாய்ப்பை தேடும் நடிகனுக்கு கூப்பிட்டு டிரஸ் அளவெடுத்து போட்டு பார்த்து டயலாக் பேச சொல்லும்போது பெரிய விஷயம் கை கால் எல்லாம் நடுங்குச்சு. நாலு நாள் கழிச்சு அந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு போயிட்டு டைரக்டர் சேர போகும்போது டயலாக் எல்லாம் பேசுவியான்னு கேட்டாரு பேசிடுவேன்னு சொன்ன நானும் பேசி காட்டி ஷூட்டிங் தொடங்க போகும் நேரத்தில் இன்னொருத்தர் ரெக்கமன்டேஷன்ல வந்து இருக்காங்க நீங்க சட்டையை காட்டுங்க அவங்க தான் நடிக்க போறாங்க என்று சொல்லியதாக சொல்கிறார்.

உடனே ஒரு மரத்துக்கு பின்னாடி வேட்டி கொடுத்தாங்க கட்டிக்கிட்டு டிரஸ் கழட்டி கொடுத்துட்டு வந்துட்டேன் என்று சொல்லி கண்கலங்குகிறார். இவரின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் கஷ்டங்களை பகிர்து எமோஷனலாக பேசி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor soori emotional speech update

actor soori emotional speech update