Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துவை கண்டித்த அண்ணாமலை, சந்தோஷப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial episode update 24-11-25

மீனா வீட்டை விட்டு வெளியேற முத்துவிடம் அண்ணாமலை கோபப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து குடித்து விட்டு பேசிக்கொண்டு இருக்க செல்வம் அவரை வீட்டுக்கு போக சொல்லுகிறார் நான் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கேன் என்று சொல்ல வேணாடா சிஸ்டர் தேடிட்டு இருப்பாங்க நீ போ என்று சொல்லுகிறார் ஏற்கனவே நீ சண்டை போட்டுட்டு வந்து இருக்க என்று சொல்ல முத்துவும் கிளம்பி விடுகிறார். வீட்டுக்கு தள்ளாடிக்கொண்டே வர அனைவரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் வந்தவுடன் மீனா மீனா என முத்து கூப்பிட யாருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் அண்ணாமலை போய் முதல்ல சாப்பிடு என்று சொல்ல மீனா எங்கப்பா என்று கேட்கிறார் போய் சாப்பிடுன்னு சொன்னேன்ல என்று சொன்ன மீண்டும் மீனாவை கூப்பிட உடனே விஜயா அவதான் இங்கு இல்லையே துணியெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டை விட்டு ஓடிப் போயிட்டா என்று சொன்ன உடனே அண்ணாமலை கோபப்படுகிறார்.

வீட்டுக்கு வந்த மருமகளை ஓடிப் போயிட்டாரு சொல்றியே என்ன பேச்சு இதெல்லாம் என்று கேட்க அதற்கு விஜயா எங்கே போய் இருக்க போற துணியெல்லாம் எடுத்துட்டு அவங்க அம்மா வீட்டுக்கு தானே போயிருக்கா என்று சொல்ல அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு என்று சொல்லி திட்டுகிறார் உடனே ரவி மற்றும் சுத்தி இருவரும் நீங்க பண்ணது ரொம்ப தப்பு முத்து என்று சொல்லுகின்றனர். என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க என்று முத்து கேட்க அண்ணாமலை நடந்த விஷயங்களை சொல்லுகிறார்.

அதாவது மீனா பைய எடுத்துக்கொண்டு குடும்பத்தினரிடம் நான் எங்க அம்மா வீட்டுக்கு போகப் போவதாக சொன்ன அதற்கு என்ன காரணம் என்று அண்ணாமலை கேட்கிறார் கூடவே விஜயாவிடம் நீ அதாவது திட்டினியா என்று கேட்க நான் எதுக்கு திட்ட போறேன் என்று சொல்லுகிறார் உடனே மீனாவிடம் விஜயா எதாவது சொன்னாளா என்று கேட்க நான் போறதுக்கு அவங்க காரணம் இல்ல அவர்தான் என்று சொல்ல என்னாச்சும்மா என்று கேட்கிறார் எவ்வளவு சொன்னாலும் குடிச்சிட்டு தான் வராரு அவர் எப்ப குடியை நிறுத்துகிறாரோ அப்பதான் நான் இந்த வீட்டுக்கு வருவேன் என்று சொல்ல விஜயா அப்போ நீ இந்த ஜென்மத்துக்கே இந்த வீட்டு பக்கமே வர முடியாது என்று சொல்லுகிறார். மனோஜ் நக்கலாக பேச உடனே ரோகிணி அவங்க எடுத்த முடிவு சரிதான் அவங்க முத்து பண்றதுனால தான் கோச்சிக்கிட்டு போறாங்க என்று சொல்ல மீனா ரோகினியை பார்த்து முறைக்கிறார்.

எனக்கு தெரிஞ்சு நீங்க இப்படி ஒரு சில்லியான காரணத்துக்காக போவீங்கன்னு தோணுதா என்று ஸ்ருதி சொல்ல வேற எந்த காரணமும் இல்லை என்று மீனா சொல்லுகிறார். அண்ணாமலை இதுதான் உன்னோட முடிவாமா என்று கேட்க ஒன்னு அவர் இந்த குடியுடனும் இல்ல என்ன மறந்துட்டோம் என்று சொல்லிவிட்டு சென்ற விடுகிறார். அண்ணாமலை நடந்த விஷயங்களை முத்துவிடம் சொல்லி இதுக்கு மேல நீ குடிக்க கூடாது நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா என்று நான் சொல்ல மாட்டேன் அது உன்னோட விருப்பம் ஆனா குடிச்சிட்டு நீ இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது என்னை என்ன நினைப்பாங்க புருஷன் குடிக்கிறதா சொல்லி வீட்டுக்கு வந்த மருமக வெளியே போனா நாளைக்கு என்ன என்ன நினைப்பாங்க. அண்ணாமலை புள்ள வளர்த்தது சரியில்லாமல் நினைப்பாங்க இனிமேல் குடிச்சிட்டு வந்தனா நான் உன்ன சேர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு விஜயா பொண்டாட்டிய தலை மேல தூக்கி வெச்சிகிட்டு ஆடனும் இல்ல உன்னை எப்படி தூக்கி போட்டுட்டு போயிட்டா பாரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு ரோகிணி இவன் எப்படியோ குடிய விடமாட்டான் அவளும் வரமாட்டா இது இப்போதைக்கு கொஞ்சம் சந்தோஷம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு முத்து என்ன சொல்லுகிறார்?சந்திரா என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 24-11-25