தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியை தனியாக ரூமுக்கு அழைத்துச் சென்று நீ எதுக்கு அந்த சிவன் கிட்ட சிரிச்சு பேசுற அவர் உனக்கு கேக் வாங்கி கொடுக்கிறார் போக்கே வாங்கிட்டு வந்து கொடுக்குறாரு நீங்க நடக்கிறது எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல என்று சொல்லுகிறார் நீ நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா கிடையாது நாங்க பிரண்ட்லியா பழகுகிறோம் அவ்வளவுதான் என்று சொல்ல இதெல்லாம் எனக்கு பிடிக்கல என்று விஜயா சொல்லுகிறார். மறுபக்கம் மனோஜ் நண்பர் சந்தோஷ் கேப்புக்காக காத்துக் கொண்டிருக்க முத்துவின் கேப் வருகிறது நீங்க எங்க எங்கே என்று கேட்க நான் தான் கேப் புக் பண்ணி இருந்தேன் என சொல்லுகிறார் வண்டி என்ன ஆச்சு என்று கேட்க ரெண்டு நாளா எனக்கு டைம் சரியில்ல அதனாலதான் என்று சொல்லுகிறார் டைம் சரியில்லைன்னு என் வண்டியில் ஏறுறீங்க என்று சொல்ல நீங்க வேற ஏம்ப என்று சொல்லிவிட்டு காரில் ஏறுகிறார் பிறகு உட்கார்ந்து உடன் மனோஜ்க்கு போன் போட்டு பேச மனோஜ் கோவமாக திட்டுகிறார் நான் பண்ணது தப்புதான் ப்ரோ என்று சொல்லியும் மனோஜ் இதுக்கு மேல கடைப்பக்கமே வந்துராதீங்க என் பொண்டாட்டி ரொம்ப திட்டுறா என்று சொல்ல உங்க ரெண்டு பேருக்கும் நான் எவ்வளவு செஞ்சிருக்கேன் இந்த விஷயத்துக்காக என்ன வர கூடாது என்று சொல்கிறீர்களே என்று சொல்கிறார் உடனே முத்து இவர்கள் பேசுவதை வைத்து சந்தேகப்பட்டு ஏதோ ஒரு விஷயம் இருக்கும் போல போட்டு வாங்கி தெரிஞ்சுக்கலாம் என்று முடிவெடுக்கிறார் பிறகு மனோஜ் ஃபோனை வைத்தவுடன் என்ன இருந்தாலும் இது மாதிரி நடந்திருக்கக் கூடாது என்று முத்து சொல்ல அப்ப மனோஜ் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டானா என்று கேட்கிறார்.
கூட பொறந்தவன் ஆச்சே எப்படி சொல்லாம இருப்பான் என்று சொல்லுகிறார். உடனே சந்தோஷ் நான் அந்த ராஜா ராணி மனோஜ் தப்பா பேசுற மாதிரி ஒரு வீடியோ வைத்து மிரட்டுனதனால நீ அவங்க கிட்ட தப்பா நடந்துக்கிற மாதிரி நடிக்க சொல்லி அனுப்புனா அவன் ஓவரா நடிச்சிட்டானா என்னனு தெரியல மூணு பொம்பளைங்க விளக்கமாத்துல வச்சு அடி வெளுத்துட்டாங்க என்று உண்மையை உளறி விட அப்படியா என்று முத்து கேட்கிறார் அப்படியானால் உனக்கு தெரியாதா என்று கேட்க தெரியாது அது தான் இப்போ நீ சொல்லிட இல்ல என்று சொல்லுகிறர் மனோஜ் கிட்ட நான் சொன்னதை சொல்லாதப்பா என்று சொல்ல சொல்ல மாட்டேன் ஆனா அவன் ஒரு கதை சொன்னா அதுக்கு சும்மா விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு ராஜா ராணி வீடு எங்க இருக்கு என்று சொல்லிவிட்டு போலாமா என கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்த முத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிடுகிறார்.
அண்ணாமலை என்னடா ஆச்சு? என்ன விஷயம் என்று கேட்க இருப்ப எல்லாரும் வந்துட்டு மனோஜ் ரோகினி என அனைவரும் வந்தவுடன் நேற்று மனோஜ் சொன்னது உண்மைதான் ஒரு பொண்ண கஷ்டப்பட்டு காப்பாத்திருக்கான் அது எவ்வளவு பெரிய விஷயம் அந்த பொண்ணு இப்போ நேர்ல வந்து நன்றி சொல்றதுக்காக வந்திருக்கு என்று சொல்ல விஜயா நீங்க தான் யாரும் நம்பல என்று பில்டப் கொடுக்கிறார் உடனே முதலில் சந்தோஷ் வந்து நிற்க மனோஜ் நீ என்னை இங்கே வந்திருக்க என்று கேட்க கொஞ்சம் பொறுமையா இருடா என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் ராஜாவும் ராணியும் வந்து நிற்க மனோஜ் ரோகினி அதிர்ச்சி அடைகின்றனர். உடனே விஜயா இவ தானே வீட்ல அன்னைக்கு சமைக்கிறேன்னு வந்தவ என்று சொல்ல உடனே ரோகினி ஓடி வந்து விஜயாவின் பக்கத்தில் இவங்க தான் பணத்தை திருடி இருக்காங்க அதுவும் இல்லாம மனோஜ் மிரட்டி காசு பொருள் என்று வாங்கி கிட்டு இருக்காங்க என்று சொல்ல ஓ இதுவரியா என்று விஜயா கேட்கிறார் உடனே மனோஜ் இவங்களை எதுக்குடா எங்க கூட்டிட்டு வந்த என்று கேட்க உன்னோட வீர தீர செயல் சொல்றதுக்கு தான் என்று சொல்லுகிறார். என்ன வந்ததுல இருந்து புரியாமலே பேசிகிட்டு இருக்கீங்க என்று மீனா கேட்க முதல்ல நான் தெளிவா சொல்றேன் இவங்க ரெண்டு பேரு எப்படி இங்க வந்தாங்க அவங்களை எப்படி கூட்டிட்டு வந்தேன்றத முதல்ல சொல்றேன்னா ஆரம்பிக்கிறார்.
முத்துவும் சந்தோஷம் ராஜா ராணி வீட்டுக்கு போக ராஜா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ராணி வந்தவுடன் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க நான் உங்களுக்கு நியாயம் வாங்கி கொடுக்க தான் வந்து இருக்கேன் எங்க அண்ணன் உங்க கிட்ட தப்பா நடந்து இருக்கான் அதுக்கு உங்களுக்கு நியாயம் கிடைக்க வேணாவா அவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிக்கிட்டு இருக்கான் எங்க அப்பா அம்மாவுக்கு தெரிய வேணாவா நீங்க ரெண்டு பேரும் வந்து எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க அவனுக்கு போலீஸ்ல புடிச்சு கொடுத்து ஜெயில்ல போட்டு விடலாம் என்று சொன்னால் ராணி அதெல்லாம் வேணாம் மன்னிச்சு விட்டுடலாம் என்று சொல்லுகிறார் அது எப்படிமா விடமுடியும் உன்கிட்ட தப்பா நடந்துக்க பாத்து இருக்கான் எந்த ஒரு பொண்ணும் இந்த விஷயத்துல பொய் சொல்ல மாட்டா என்று சொல்ல இருவரும் வர மறுக்கின்றனர். பொறுமையாக பேசிக் கொண்டிருந்த முத்து அவர்கள் வராததால் உனக்கு ரெண்டு நிமிஷம் டைம் கொடுக்கிறேன் சாப்பிட்டு வந்தேனா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்துருவேன் இல்லனா என்ன கையை முறுக்க இருவரும் பயந்து வந்து விடுகின்றனர்
பிறகு இந்த விஷயத்தை கேட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைய ரவி அப்ப இந்த பொண்ணு வீட்டுக்கு போய் தான் அவன் எல்லார்கிட்டயும் அடி வாங்கினானா என்ற உண்மை தெரிய வருகிறது முத்துவும் ஆமா என்று சொல்லுகிறார். என்ன வேலை பார்த்து வச்சிருக்க மனோஜ் என்று அண்ணாமலை கேட்க அவன் அப்படியெல்லாம் பண்ணி இருக்க மாட்டானு விஜயா சொல்கிறார் அவன் முழிக்கிறத பார்த்தாலே தெரியலையா என்று ரவி சொல்லுகிறார்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நீங்க எதுக்கு இப்படி பண்ணீங்க என்று கேட்க நான் தப்பா எல்லாம் நடந்ததில்ல உண்மையை வரவைக்க தான் இப்படி பண்ண என்று சொல்லி சந்தோஷம் இழுத்து விடுகிறார் சொல்லுங்க ப்ரோ என்று சொல்லுகிறார் நான்தான் இந்த ஐடியாவை கொடுத்தேன் என்ன சந்தோஷ் சொல்ல அவன் சொன்ன உனக்கு எங்க போச்சு அறிவு என்று விஜயா கேட்கிறார். உடனே ரோகினி மனோஜ் மேல எந்த தப்பும் இல்ல இவங்க தான் பொய் சொல்றாங்க என்று சொல்ல உடனே ராணி அவர்தான் எங்ககிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினாரு என்று சொல்லுகிறார் அதற்கு விஜயா என்ன சொல்லுகிறார்? ராஜா என்ற ஆதாரத்தை காட்ட குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? முத்து என்ன முடிவெடுக்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 29-09-25