Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜ் விஜயா செய்த வேலை, ஈஸ்வரிக்கு கொடுத்த தண்டனை, பாக்கியலட்சுமி ,சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி என இரண்டு சீரியல்களும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் தொடர்ந்து தப்பித்து வரும் மனோஜ் மற்றும் விஜயாவை சிக்க வைக்க திட்டமிடும் முத்து பட்டையை போட்டுக்கொண்டு ஒரு எலுமிச்சம் பழத்துடன் வீட்டுக்கு வந்து நகையை எடுத்தவங்களை கண்டுபிடிக்க ஒரு சாமியார் போய் பார்த்தேன். அவர் ஒரு எலுமிச்சம்பழத்தை மந்திரிச்சு கொடுத்து இருக்காரு.. இதை வீட்டில் வச்சா நகை எடுத்தவங்களோட வாய் கோணையாகிடும்னு சொன்னதாக சொல்லி பூஜையறையில் வைக்கிறார்.

இந்த எலுமிச்சம் பழத்தால் விஜயா மற்றும் மனோஜ் தூக்கம் இல்லாமல் தவிக்க இருவரும் கூட்டு சேர்ந்து யாருக்கும் தெரியாமல் எலுமிச்சம் பழத்தை வெளியே தூக்கிப் போட பிளான் போட்டு இறுதியாக மொத்த குடும்பத்திடமும் சிக்கிக் கொள்கின்றனர்.

அதேபோல் அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் கோட்டில் ஏற்றப்பட்ட ஈஸ்வரி வழக்கை விசாரித்த நீதிபதி இறுதியாக ஈஸ்வரி கொலை முயற்சியில் ஈடுபட்டது உறுதியாவதாக சொல்லி அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறார். இதையடுத்து ஒரே ஒரு சாட்சியை மட்டும் விசாரிக்க விரும்புவதாக பாக்கியா தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் அனுமதி கேட்க மயூவை அழைத்து வந்து கூண்டில் ஏற்றுகின்றனர்.

இப்படி மக்கள் எதிர்பார்த்த திருப்பங்களுடன் இந்த இரண்டு சீரியல்களும் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Sirakadikka Aasai and Baakiyalakshmi Upcoming Promo for July 3rd Week Update
Sirakadikka Aasai and Baakiyalakshmi Upcoming Promo for July 3rd Week Update