Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பார்வதியிடம் போன முத்து, மீனா, விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

ரவி இந்த பிரச்சனையை இப்படியே விட்டு விடலாம் அவன் எடுக்காமல் கூட இருந்திருக்கலாம் என்று சொல்ல ஆரம்பத்துல நிறைய பத்தி கேட்டதும் கொஞ்சம் அமைதி ஆகிட்டான் கவனிச்சியா? அப்பவே உனக்கு தெரியலையா அவன்தான் ஏதோ பண்ணி இருக்கானு என்று ஆவேசப்படுகிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வந்து மனோஜ் விஜயாவிடம் விஷயத்தை சொல்ல அவள் இனிமே உஷாரா இருக்கணும் சீக்கிரம் நகையை மாற்றி வைத்து விடணும் பணத்துக்கு ஏற்பாடு பண்ணு என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து முத்துவிற்கு பார்வதியிடம் பேசினால் உண்மை தெரிய வாய்ப்பிருக்கு என்று யோசனை வர மீனாவுக்கு போன் போட்டு பார்வதி வீட்டிற்கு வர சொல்கிறார். சும்மா பார்த்துட்டு போக வந்ததாக சொல்லி பழத்துடன் வீட்டிற்குள் வரும் முத்து மீனா பார்வதியை உட்கார வைத்து பேச்சு கொடுக்கின்றனர்.

அப்படியே நகை எடுக்க போன விஷயத்தைப் பற்றி சொல்ல அது தான் கவரிங் நகை ஆச்சே என்று உளற உங்களுக்கு எப்படி அந்த விஷயம் தெரியும் என்று கேள்வி கேட்க விஜயா நடந்தது சொன்னா என்று சமாளிக்கிறார். நகை எப்படி மாறுச்சுன்னு ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க மீனா வீட்ல மாறி இருக்கும், உங்க பாட்டி நகை ஊர்ல மாதிரி இருக்கும்னு சொன்னா என்று விஜயா சொன்னதை அப்படியே சொல்லி சமாளிக்கிறார்.

அதைத்தொடர்ந்து இல்ல அத்தை நடுவுல தான் ஏதோ நடந்திருக்கு.. அம்மாவுக்கு தான் என்ன நடந்துச்சுன்னு தெரியும் என்று சொல்ல பார்வதி ஆமா விஜயாவுக்கு தெரியும் என்று மீண்டும் உண்மையை உளற முத்து பாகமாக பேசி விஷயத்தை வாங்க முயற்சி செய்ய பார்வதியும் மனம் மாறி உண்மையை உடைக்க வரும்போது விஜயா ஓடி வந்து தடுத்து விடுகிறார்.

Siragadikka Aasai Serial Episode Update
Siragadikka Aasai Serial Episode Update