Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரவியை அடித்து துரத்திய முத்து. மீனா செய்த செயல். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி அப்பாவை பார்க்க ஓடி வர எல்லோரும் அவரைப் பிடித்து திட்டுகின்றனர்.

இருந்தாலும் ரவி அப்பாவை பார்க்காமல் போக மாட்டேன் என்று சொல்லி உள்ளே போகும் முயற்சி செய்ய அந்த சமயம் பார்த்து அங்கு வரும் முத்து ரவியை திட்டி அடித்து துரத்துகிறார். உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை நீ அவரை பார்க்கக் கூடாது என கூறுகிறார். விஜயா அவரை இன்னும் கஷ்டப்படுத்தாத போயிடு என கோபப்பட ரவி வேறு வழி இல்லாமல் அங்கிருந்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து அண்ணாமலை ஆபரேஷன் வார்த்தைக்கு கொண்டு செல்ல முத்து பணத்திற்காக வெளியே செல்ல விஜயா மற்றும் ரோகிணி கோவிலுக்கு செல்கின்றனர். அண்ணாமலைக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிகிறது.

மனோஜ் மருந்து மாத்திரை வாங்க வெளியே செல்ல அண்ணாமலை நண்பர் மட்டுமே உடன் இருக்கும்போது மீனா அங்கு வந்து மாமாவை பார்க்கணும் என்று சொல்லி உள்ளே சென்று பார்த்து அவரது கையில் சாமி கயிறை கட்டுகிறார்.

அதற்குள் விஜயாவும் ரோகிணியும் வந்துவிட அண்ணாமலையின் நண்பர் மீனாவுக்கு போன் செய்து நீ அந்த வழியாகவே போயிடு என கூறுகிறார். பிறகு மீனா வேறு வழியாக வெளியே வர ரோகிணி மற்றும் விஜயா ஆகியோர் இன்னொரு வழியாக உள்ளே சென்று அண்ணாமலையை பார்த்து கலங்குகின்றனர்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த ரவி என்னை அப்பாவை பார்க்க கூட விடல என கலங்கி அழ ஸ்ருதி ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 02-10-23
sirakadikka aasai serial episode update 02-10-23