தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு தற்போது லியோ படத்திற்கான பிரமோஷன் வேலைகளிலும் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் லண்டனில் உள்ள பேருந்து ஒன்றில் லியோ திரைப்படத்திற்கான போஸ்டர் பிரமோஷன் செய்யும் விதமாக ஒட்டப்பட்டுள்ளதாக புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
#LEO Promotion Begins..????
Location: UK pic.twitter.com/bLy6Z5ljsO
— Laxmi Kanth (@iammoviebuff007) August 12, 2023

