Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மாவீரன். போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

maaveeran-movie-collection-update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சரிதா, சுனில் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருந்த
இப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.

இந்த நிலையில் 11 வது நாள் முடிவில் இப்படம் உலக அளவில் 75 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருவதாக ஸ்பெஷல் போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலுக்கு லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள் இதனை இணையதளத்தில் வைரலாக்கியம் வருகின்றனர்.