Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நோயின் தாக்கத்தை தாங்க முடியாமல் பல முறை தற்கொலை முயற்சி செய்தேன்: ரோபோ சங்கர்

Actor Robo Shankar tried to commit suicide

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

எப்போதும் குண்டாகவே காணப்பட்ட ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிறகு அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் மஞ்ச காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்தபோது நோயின் தாக்கத்தை தாங்க முடியாமல் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன், அப்போதெல்லாம் என்னை அதிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்து எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய குடும்பம் மட்டும்தான் என தெரிவித்துள்ளார்.

ரோபோ சங்கர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறிய தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Actor Robo Shankar tried to commit suicide
Actor Robo Shankar tried to commit suicide