டிக் டாக் மூலமாக விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் பேசி செத்த பயலே, நாரப்பயலே போன்ற டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
டிக் டாக் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது படங்களிலும் நடித்து வரும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.
இப்படியான நிலையில் உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு நடிகர் ஜி பி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படத்தை பார்த்த பலரும் ஜிபி முத்துவுக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
???????????? pic.twitter.com/Cb2eEqHCEW
— Sonia Arunkumar (@rajakumaari) April 15, 2023

