Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடிபோதையில் கோபி. பாக்யாவிற்கு வந்த ஃபோன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் இனியா விட்டுப் போனதை பற்றியும் பாக்யாவின் கையை பிடித்தது பற்றியும் நினைத்து கோபி ஒயின் ஷாப்பில் அளவுக்கு அதிகமாக சரக்கடிக்கிறார்.

அடுத்து நிதானம் இல்லாமல் காரை ஓட்டி வரும் கோபி ஒரு இடத்தில் கல்லின் மீது மோதி கீழே விழுகிறார். அந்த வழியாக வந்த ஒருவர் கோபியின் ஃபோனை எடுத்து அதில் அவரது குடும்பத்தினர் நம்பரை தேட மனைவி என்ற பெயரில் பாக்கியா நம்பர் சேவ் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் அவர் பாக்யாவுக்கு போன் செய்து உங்க வீட்டுக்காரர் குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கிறார் வந்து கூட்டிட்டு போங்க என்று சொல்ல பாக்கியா எதுவும் சொல்லாமல் போனை வைக்கிறார். பிறகு எழில் அங்கு வர அவனிடம் விஷயத்தை சொல்ல முதலில் அப்படியே விட்டுவிடலாம் என சொல்ல பாக்கியா விஷயத்தை தெரிஞ்சுகிட்டு எப்படி அமைதியாக இருக்கிறது என்று கேட்கிறார்.

அதன் பிறகு எழில் சரி வா மா போயிட்டு பாத்துட்டு வந்துடலாம் என சொல்லி இருவரும் கிளம்பி கோபி விழுந்து கிடக்கும் இடத்துக்கு வருகின்றனர்‌. பிறகு என்ன செய்யலாம் என கேட்க எழில் இப்படியே விட்டுட்டு போகலாம் இல்லன்னா போலீசுக்கு போன் பண்ணி சொல்லலாம் என்று சொல்ல பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார்.

பிறகு எழில் சரி கூட்டிட்டு போயிட்டு அவர் வீட்டில் விட்டு விடலாம் என சொல்ல அங்கேயே எப்படி விடுவது என பாக்கியா யோசிக்கிறார். பிறகு வேறு வழி இல்லாமல் சரியென ஒப்புக்கொள்ள டூவீலரை விட்டுட்டு வர முடியாது என்ற காரணத்தினால் பாக்கியா காரை நான் ஓட்டுகிறேன் நீ பின்னாடி பைக்கில் வா என்று சொல்லி கோபியை அழைத்துக்கொண்டு காரில் கிளம்புகிறார்.

போதையில் உளறிக்கொண்டு வரும் கோபி பாக்கியா இப்போ ஸ்டைலா மாறிட்டா இங்கிலீஷ்ல கத்துகிறா என பேசிக்கொண்டு வருகிறார். அந்த ராதிகாவை கட்டிக்கிட்டு தான் என் நிம்மதியே போச்சு என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update