Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படம் பற்றி சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட எச் வினோத்

h vinoth about thunivu movie

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. ‘துணிவு’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. துணிவு ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எச்.வினோத் இதையடுத்து ‘துணிவு’ பட இயக்குனர் எச்.வினோத் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். துணிவு படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், துணிவு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம் ஆனால் அது முடியவில்லை என்றதும் டிசம்பரில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம் அதுவும் முடியவில்லை. இப்போது ரிலீஸ் வரைக்கும் இன்னும் ஒரு பத்து நாட்கள் இருந்தால் நன்றாக செய்திருக்கலாம் என்ற சூழ்நிலை தான் இருக்கிறது.

ஆனால், ரீலீஸ் தேதி அறிவித்துவிட்டோம் செய்தே ஆக வேண்டும் இதை விட்டால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் தள்ளி போய்விடும் அது பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று தான் இப்போது ரிலீஸ் செய்கிறோம்” என்று பல விஷயங்களைபிரபல நாளிதழில்  பகிர்ந்துள்ளார்.

h vinoth about thunivu movie
h vinoth about thunivu movie