Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் டிரைலர் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படக்குழு

varisu-trailer-views-latest-update

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்று இணையதளத்தை தெறிக்க விட்டது.

அதன் பிறகு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த வாரிசு படத்தின் டிரைலர் நேற்றைய முன்தினம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் வாரிசு படத்தின் ட்ரெய்லரை பார்வையிட்ட பார்வையாளர்கள் குறித்த விவரத்தை பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை ஒட்டுமொத்தமாக பெற்றிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்களால் பயங்கரமாக வைரலாகி வருகிறது.