Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எழிலுக்கு அறிவுரை வழங்கிய கோபி. வருத்தத்தில் பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 04-01-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி எழிலை சந்தித்து பேசி அறிவுரை சொல்ல அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீங்க கிளம்புங்க எல்லாம் எழுதி சொல்ல கரியர் ரொம்ப முக்கியம், உன்ன பத்தி ஒரு சிறிய விஷயம் நடந்தாலும் அது உலகம் முழுக்கவும் பேசுவாங்க ஏன்னா உன்னுடைய ஃபீல்டு அப்படி என கோபி அறிவுரை வழங்கி அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பிறகு பாக்கியா இனியாவுக்காக டியூஷன் சென்டர் ஒன்றில் சென்று விசாரித்து பன்னிரண்டாயிரம் பணம் கட்டி விட்டு நாளையிலிருந்து அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி மீண்டும் வர்ஷினியின் அப்பாவை சந்தித்து எழிலுக்கு படம் பண்ணி கொடுக்குமாறு பேச அவர் அது மட்டும் மூடியவே முடியாது அவன் என் முன்னாடியே என் பொண்ணு கிட்ட அப்படி கோவமா பேசுறான்.

எனக்கும் அவன் படத்தை பண்ண கூடாதுன்னு எந்த எண்ணமும் கிடையாது. ஆனா இந்த வயசுல இவ்வளவு கோபம் இருக்கக் கூடாது. என் பொண்ணு அவன ஆசைபட்டா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே, அத விட்டுட்டு வேற ஒரு பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என கேட்க ஈஸ்வரி அவன் தெரியாம அப்படி பேசிட்டான் கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் நான் அவன்கிட்ட பேசி புரிய வைக்கிறேன் என ஈஸ்வரி சொல்ல முதல்ல அவனை என்கிட்ட வந்து பேச சொல்லுங்க, என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல சொல்லுங்க என கூறுகிறார்.

பிறகு ஈஸ்வரி வர்ஷினியிடம் உனக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும் இது ஈஸ்வரி கொடுக்கிற வாக்கு என சத்தியம் செய்கிறார். அதன் பிறகு பாக்யா எழிலிடம் அவனது வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட எழில் நீ ஒன்னும் கவலைப்படாதம்மா நீ என் கூட இருந்தா போதும் எல்லாத்தையும் கடந்து நான் மேல வருவேன் என கூறுகிறார். அமிர்தா விஷயம் மட்டும் வீட்டுக்கு தெரிஞ்சா நீயும் நானும் மட்டும்தான் இந்த வீட்ல இருப்போம், அப்படி இல்லன்னா நம்ம ரெண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள் என பாக்கியா வருத்தப்படுகிறார்.

அடுத்து கிச்சனில் இருக்கும் போது வீட்டுக்கு வரும் தன்னுடைய மாமனாரிடம் இனியாவுக்காக டியூஷன் பீஸ் கட்டிய ரசீது காட்டி அவளை நாளையிலிருந்து டியூஷன் கொண்டு போய் விடுங்க, நீங்களே சேர்த்து விட்ட மாதிரி இருக்கட்டும் நான் சேர்த்து விட்டதா சொல்ல வேண்டாம் அப்புறம் அதுக்கும் ஒரு பிரச்சனை பண்ணுவாரு என பாக்யா சொல்ல ராமமூர்த்தியும் சரியென சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 04-01-23
baakiyalakshmi serial episode update 04-01-23