Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜய் ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து பிரபல நிறுவனம் வெளியிட்ட பதிவு வைரல்

popular production company wished christmas in thalapathy vijay style

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் அவர்கள் தனக்கு போட்டியாளர் அவர்தான் என்று அவரது முழு பெயரான ஜோசப் விஜய் என்பதை குறிப்பிட்டு ரசிகர்களுக்காக மோட்டிவேஷனல் ஸ்பீச் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜோசப்பின் மகனான இயேசு ஒருவரோடு ஒருவர் போட்டி போட பிறந்தவர் இல்லை, அதற்கு பதிலாக ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பும், ஆதரவும் கொடுக்க பிறந்தவர் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டு இந்த கிறிஸ்மஸ் உங்கள் இதயங்களுக்கு அமைதி, அன்பு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கட்டும் என்று விஜய் ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது’ . அது தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.