Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பத்தாரால் கண் கலங்கி அழும் பாரதி.. வெண்பா எடுத்த முடிவு.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி வீட்டில் சௌந்தர்யா உட்பட எல்லோரும் சோகத்தோடு உட்கார்ந்து கொண்டிருக்க இந்த பக்கம் கண்ணம்மா மற்றும் லட்சுமி தூக்கம் வராமல் தவிக்க லட்சுமி அப்பா இப்படி பண்ணியிருப்பார் நான் கொஞ்சம் கூட நினைக்கல, இப்போ எனக்கு அவரை பிடிக்கவே இல்லை எனக்கு அப்பா யாருன்னு தெரியாமலேயே இருந்திருக்கலாம் என சொல்ல கண்ணம்மா அவளை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார்.

இந்த பக்கம் எல்லோரும் சோகமாக உட்கார்ந்து இருக்க அப்போது பாரதி வந்து எல்லோரிடமும் பேச முடியல அனைவரும் எழுந்து ஆளுக்கு ஒரு திசையாக சென்று விடுகின்றனர். இதனால் பாரதி கண்கலங்கி அழுகிறார்.

இந்த பக்கம் வெண்பா ரூமுக்குள் இருக்க அப்போது அங்கு வரும் ஷர்மிளா உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது ரோஹித் கட்டின தாலி உன் கழுத்துல இருக்கு இனிமே புரிஞ்சு நடந்துக்கோ என கூறுகிறார். பிறகு பால் சொம்பை எடுத்துக் கொண்டு ரோஹித் ரூமுக்கு செல்லும் வெண்பா பாரதிக்காக தான் இந்த கர்ப்பத்தை சுமந்தேன். இனிமேல் எதற்கு என படிக்கட்டில் இருந்து விழுகிறார். பிறகு வெண்பாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர்.

இந்த பக்கம் பாரதி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், அதுக்காக என்ன எல்லாரும் ஒரு குற்றவாளி மாதிரி நிக்க வச்சு தலை குனிய வச்சுட்டாங்க. அந்த கண்ணம்மாவை இதே மாதிரி நிக்க வச்சு நான் கேள்வி கேட்பேன். டி என் ஏ டெஸ்ட் வரட்டும் அவளுக்கு இருக்கு என சொல்லிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் கண்ணம்மா தூக்கம் வராமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 bharathi kannamma serial episode update

bharathi kannamma serial episode update