Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடு ரோட்டில் நண்பனிடம் புலம்பிய கோபி.. செழியனால் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு பாக்கியா என்னிடம் நீயாவது என்னுடன் இருக்கியே என கூறுகிறார். கல்யாணமான புதுசுல பாக்கியா குடும்பத்துக்காக பட்ட கஷ்டங்கள் கோபி நடந்து கொண்ட விதம் உள்ளிட்டவைகளை பேசி வருத்தப்படுகிறார். அதன் பிறகு எழில் பாக்யாவுக்கு உன் மேல எந்த தப்பும் கிடையாது நீ பண்ண ஒரே தப்பு உன் வாழ்க்கையில் கோபியை கல்யாணம் பண்ணது தான் என கூறுகிறார்.

இந்த பக்கம் கோபி நடு ரோட்டில் நண்பனிடம் புலம்பி தவிக்க அந்த நேரத்தில் இனியா போன் செய்து எங்க டாடி இருக்கீங்க உங்களை பாக்கணும் போல இருக்கு சாப்டீங்களா இல்லையா என விசாரிக்க கோபி கண்கலங்குகிறார் ‌‌ அதன் பிறகு செழியன் ஜெனியிடம் அப்பாவை அம்மா பிளான் பண்ணி வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க இனிமே இந்த குடும்பத்துக்கு யாரு சம்பாதித்து தருவா? அம்மா சம்பாதிக்கிறது ஒரு நாளைக்கு கூட வராது. அப்பாவுக்கு அடுத்ததா அதிகமா சம்பாதிக்கிறது நான்தான் அடுத்து என் கிட்ட வந்து நின்னா என்னால எதுவும் தர முடியாது. நம்ப ரெண்டு பேருக்கு என்ன செலவாகுமோ அதை தான் கொடுப்பேன் அவ்வளவு தான் முடியும் என கூறுகிறான்.

அதன் பிறகு ஆபீசுக்கு கிளம்பும்போது ஈஸ்வரி இனிமேல் கோபியோட இடத்தில் இருந்து இந்த குடும்பத்தை வழி நடத்த வேண்டியது நீதான் என சொல்ல செழியன் அதிர்ச்சடைகிறான். ஆனால் ஜெனி அதெல்லாம் செழியன் பாத்துப்பான். நீங்க கவலைப்படாதீங்க என கூறுகிறார்.

உடனே பாக்கியா சாப்பிட்டு போ என சொல்ல செழியன் வேண்டாம் என முகத்துக்கு நேராக சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறான். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update