தமிழ் சினிமாவிற்கு ‘பருத்திவீரன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கார்த்திக். தனது முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பையா, சிறுத்தை, தோழா போன்று பல படங்களை நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “விருமன்”.
இப்படத்தை ஏற்கனவே கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘கொம்பன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இப்படத்தையும் இயக்கியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரான ஷங்கர் அவர்களின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஆகஸ்ட் 12ஆம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலான ‘மதுர வீரன்’ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இது தனக்கு பிடித்தமான பாடல் என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
Let the celebrations begin!
Here is a glimpse of #MaduraVeeran from #Viruman
In theatres from August 12th!@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @AditiShankarofl @rajsekarpandian @2D_ENTPVTLTD @Dir_Rajumurugan @sonymusicsouth
— Raja yuvan (@thisisysr) August 2, 2022

