Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

varisu-movie-rights-details

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷியாம், நடிகைகளில் ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தில் சாட்டிலைட் மற்றும் OTT உரிமையை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

ஆமாம் சன் டிவி சாட்டிலைட் உரிமையை கைப்பற்ற அமேசான் பிரைம் நிறுவனம் OTT ரிலீஸ் உரிமையை கைப்பற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

 varisu-movie-rights-details

varisu-movie-rights-details