Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜானகி மேடத்திடும் சத்தியம் செய்த பாரதி கண்ணம்மா.. ஆப்ரேஷனுக்கு சம்மதித்த ஜானகி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஜானகி மேடம் மற்றும் அவருடைய கணவருக்கு கோவிலுக்கு சென்று அவரது பிள்ளைகள் 60வது திருமணம் செய்து வைக்கின்றனர். பிறகு கண்ணம்மா ஹேமா மற்றும் லட்சுமி உடன் நமது பிரசாதம் சாப்பிடும் போது நீங்களே உங்க கையால ஊட்டி விடுங்க என கூற கண்ணம்மா இருவருக்கும் ஊட்டி விடுகிறார். நான்தான் உங்க அம்மா என்ன கண்ணம்மா மனதுக்குள் சொல்லிக்கொள்ள ஹேமா நீங்களே அம்மாவா இருக்கணும் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். ‌

பிறகு மருத்துவமனையில் ஜானகி மேடத்தின் பிள்ளைகள் பாரதியை சந்தித்து அம்மாவுக்கு ஆபரேஷன் செய்துவிடலாம் என சொல்ல நீங்கதான் இது மைனர் ஆப்ரேஷன் என பேசி அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும் என சொல்லி பிறகு பாரதியும் ஜானகி மேடம் விடம் பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைக்கிறார்.

அதன் பிறகு ஜானகி மேடம் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரையும் தனித்தனியாக அழைத்து எனக்காக நீங்க உங்களுக்குள்ள இருக்க கஷ்டத்தை வேதனைகள் அனைத்தையும் மறந்து ஒரே ஒரு நாள் குழந்தையோட வெளியே போய் முழுசா பழைய வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க என கூறுகிறார். இருவரும் ஜானகி மேடத்திற்காக கண்டிப்பாக செய்கிறேன் என சத்தியம் செய்து கொடுக்க இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update