நடிகர் தனுஷை வைத்து தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் தான் “நானே வருவேன்”. டபுள் ஆக்ஷனில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நிறைவு பெற்றதாக இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதற்கட்டமாக தனுஷின் போஸ்டர் வெளியிட்டதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் தனது பிறந்தநாள் அன்று மீண்டும் ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். அந்த போஸ்டரில் தனுஷ் உடன் இணைந்திருக்கும் செல்வராகவனை பார்த்த அனைவரும் இப்படத்தில் அவரும் நடித்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்ற புதிய தகவலை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளார்.
Dubbing started!! ????#naanevaruven
@theVcreations @dhanushkraja @thisisysr @omdop @dhilipaction @theedittable @RVijaimurugan @StunShiva8 @Actress_Indhuja @ElliAvrRam pic.twitter.com/NSlybCkOb7
— selvaraghavan (@selvaraghavan) July 13, 2022

