Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் re entry கொடுக்கும் அனுஷ்கா.. வைரலாகும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

actress anushka-reentry-in-comedy-movie

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மணி படங்களிலும் பிசியாக நடித்து வந்த இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய நிலையில் அதன் பின்னர் எடையை குறைக்க முடியாமல் தவித்து பட வாய்ப்புகளை இழந்தார்.

இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதுவும் அனுஷ்கா நடிக்கப் போவது ஒரு காமெடி கதை களம் கொண்ட திரைப்படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வளர்ந்து வரும் பிரபல நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த படத்தில் அதிகாரப்பூர் அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

actress anushka-reentry-in-comedy-movie
actress anushka-reentry-in-comedy-movie