zee-tamil-in-surprise-to-prabhu-deva
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ்.
இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் சமீபத்தில் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. 12 சாமானிய போட்டியாளர்கள் 12 திரையுலகப் பிரபலங்களுடன் இணைந்து நடனமாட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சினேகா, பாபா பாஸ்கர், சங்கீதா உள்ளிட்ட நடுவர்களாக பங்கேற்க கிகி மற்றும் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். 12 போட்டியாளர்கள் தேர்வானதை தொடர்ந்து இந்த வாரம் அவர்களோடு ஜோடி போட போகும் 12 பிரபலங்கள் யார் என்பது தேர்வாக உள்ளது.
மேலும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் பிரபுதேவா படித்த பள்ளியில் இருந்து அவர் அமர்ந்த பெஞ்சை எடுத்து வந்து ஜீ தமிழ் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவருடைய பள்ளிப்பருவ நண்பர்களையும் அழைத்து வந்துள்ளனர். பெஞ்சில் நண்பர்களோடு அமர்ந்து சில கேள்விகளுக்கு பிரபுதேவா பதில் அளித்துள்ளார். மேலும் பிரபுதேவா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார்.
இதனால் இந்த வார டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி எதிர்பார்ப்பை காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பலாம்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…